1 / 11
பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் போட்டிகளை சமாளித்து வேலூரைச் சேர்ந்த ‘கண்ணன் கோலி சோடா’ நிறுவனம் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
2 / 11
1924-ல் கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட ‘கண்ணன் அண்ட் கோ’ கோலி சோடா நிறுவனம், 3-வது தலைமுறையாக ஆனந்த கிருஷ்ணன், ஹரி கிருஷ்ணன் சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
3 / 11
இதுகுறித்து விவரிக்கும் ஆனந்த கிருஷ்ணன், “வேலூரின் முதல் தொழிற்சாலையாக ‘கண்ணன் அண்ட் கோ’ என்ற பெயரில் 1924-ல் கார்த்திகை மாதத்தில் பச்சை, பன்னீர், இஞ்சி வாசனை களில் கோலி சோடா அறிமுகமானது.
4 / 11
ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால் ஏறக்குறைய 25 ஆண்டுகள் வரை எங்கள் தாத்தாதான் ஏகபோக வியாபாரம் செய்துள்ளார்’ என்கிறார் ஆனந்த கிருஷ்ணன்
5 / 11
கோலி சோடாவுக்கு 1995-ல் ‘கோக-கோலா’ சவாலாக மாறியது. 2010 வாக்கில் இந்தியாவுக்கே கோலி சோடா பாட்டிலை சப்ளை செய்து வந்த உத்திரபிரதேச மாநிலதொழிற்சலை மூடப்பட்டது.
6 / 11
ஆனால், கண்ணன் அண்ட் கோ நிறுவனத்தினர், பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கடைசியாக 15 நாட்கள் தொழிற்சாலையை இயக்க வைத்து 5 ஆண்டுகளுக்கு தேவையான சோடா பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர். அதேநேரம், தமிழ்நாட்டில் இருந்த பல கோலி சோடா கம்பெனிகள் தொழிலை விட்டு வெளியேறின.
7 / 11
ஆனந்த கிருஷ்ணனின் தந்தை மோகன கிருஷ்ணன் கூறும்போது, ‘‘நாங்கள் கடைசியாக வாங்கி வைத்த பாட்டில்களை 2014-க்கு பிறகு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வெளிநபர்களிடம் இருந்த பழைய பாட்டில்களை வாங்க ஆரம்பித்தோம்” என்றார்.
8 / 11
ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்த சில கோலி சோடா கம்பெனிகள் சேர்ந்து மீண்டும் பாட்டில் தயாரிப்பு கம்பெனியிடம் பேசி அந்த ஆலையை இயக்க ஏற்பாடு செய்தோம்’’ என்றார் மோகனகிருஷ்ணன்.
9 / 11
தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போராட்டத்துக்குப் பிறகுதான் ‘கோலி சோடா’ மீது இளைஞர்களுக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது என்று கூறுகிறார்.
10 / 11
மேலும் மோகன கிருஷ்ணன் கூறும்போது, “பன்னாட்டு குளிர்பானங்களை தவிர்த்து கோலி சோடாவை வாங்கி குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களுக்கு ஏற்பட்டதால்தான் இந்த தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. கோலி சோடா தயாரிப்பு இயந்திரங்களும் நவீனமயமாகிவிட்டன’’ என்றார்.
11 / 11
கண்ணன் கோலி சோடா இன்று பன்னீர், பச்சை, ப்ளூ பெர்ரி, ஆரஞ்ச், கிரேப், லெமன் வாசனைகளில் விற்பனையாகிறது. | செய்தி: வ.செந்தில்குமார் | படங்கள்: வி.எம்.மணிநாதன்