Published on : 21 Feb 2025 16:37 pm
முந்திரிப் பருப்பு... கொழுப்பு (43%) அதிகமுள்ள உணவுப் பொருள் இது. 100 கிராம் முந்திரி 550 கலோரிகளைத் தரவல்லது. இது காலை உணவுக்குச் சமம்.
முந்திரி பருப்பு உடலுக்கு அதிக வலிமையைச் சேர்க்கிறது. தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், மெக்னீசியம் ஆகிய தாதுகள் இதில் மிகுந்துள்ளன.
நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் ஓரளவுக்கு உள்ளன. கால்சியம், குரோமியம் ஆகியவை மிகவும் குறைந்த அளவில் உள்ளன.
உடல் எடை குறைந்தோர், வளரும் பருவத்தினர், உடலுக்கு கொழுப்பு தேவைப்படுவோர் தினமும் 5 முந்திரிப் பருப்புகள் சாப்பிடலாம். இந்த அளவை மீறினால் கொழுப்பு கூடும்.
நிறைய பேர் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சாப்பிடுகிறார்கள். உப்பு அல்லது காரம் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். இது சரியான முறை அல்ல.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைக் கவனத்தில் கொண்டு, முந்திரிப் பருப்பை அளவோடு சாப்பிடுவது நல்லது.
இதய நோயாளிகள், ரத்தக் கொழுப்பு மிகுந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் கொண்டவர்கள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பைச் சாப்பிடக் கூடாது.