Published on : 06 Feb 2025 19:01 pm
உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி.
அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாக பேசப்படுகிறது.
சீன புத்தாக்க நிறுவனமான டீப்சீக் தனது ‘ஆர்1’ சாட்பாட் மூலம், அமெரிக்க ஏஐ ஆதிக்கத்துக்கு எதிரான சவாலை உறுதிசெய்துள்ளது, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
‘சாட்ஜிபிடி’, ‘கிளாடு’, ‘கூகுள் ஜெமினி’, ‘கிராக்’ போன்ற இன்னொரு ஏஐ சாட்பாட் தான் என்றாலும், டீப்சீக் தனிக் கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, டீப்சீக் வெறும் ரூ.48.77 கோடியில் சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது.
சொற்ப முதலீட்டில் டீப்சீக் தயாராகி உள்ளது. ஆனால், அதன் ஆற்றலும் செயல்பாடும் சாட்ஜிபிடிக்கே சவால் விடுகிறது.
டீப்சீக் நிறுவனர் Liang Wenfeng, தன்வசம் இருந்த பழைய என்விடியா சிப்களைக் கொண்டே, ஏஐ சாட்பாட்டுக்குத் தேவையான செயல்திறனைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
புதிய தொழில்நுட்பச் சேவைகளின் செயல்பாடு ரகசியமாக வைக்கப்படும். ஆனால் டீப்சீக், தனது நுட்பங்களை மிக விரிவாக ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
டீப்சீக் சாட்பாட்டை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, தங்கள் விருப்பம் போலப் பயன்படுத்திக்கொள்ளலாம். டீப்சீக் இலவசமாகக் கிடைப்பது கவனிக்கத்தக்கது.
சொற்பமான முதலீட்டில் ஏஐ சாட்பாட்டை உருவாக்க முடியும் என்றால், மற்ற நாடுகளுக்கும் இது சாத்தியமே என்னும் நம்பிக்கையையும் அளிக்கிறது. | தகவல்: சைபர் சிம்மன்