Published on : 04 Oct 2025 13:44 pm

தமிழில் ‘நான் மகான் அல்ல’, ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘சிங்கம்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.

தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் காஜல் அகர்வால், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“நான் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தி மற்றும் தமிழ் திரைத்துறைகளுக்கு இடையே அதிக வித்தியாசம் இருக்கிறது” என்கிறார் காஜல் அகர்வால்.

“வருகிற வதந்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை” என்று காஜல் அகர்வால் கூறுகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார் காஜல் அகர்வால். அதில் க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வைரல் ஆகின.







