Published on : 09 Apr 2025 19:15 pm
‘சென்சேஷன்’ நாயகி கயாடு லோஹர் தனது இன்ஸ்டா புகைப்பட அப்டேட்ஸ் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘டிராகன்’ படத்தின் மூலம் இணையத்தில் கொண்டாடப்பட்ட நாயகி கயாடு லோஹர். ‘டிராகன்’ படத்தின் தாக்கத்தில், கயாடு லோஹருக்கு புதுப்பட ஆஃபர்கள் வரிசைகட்ட தொடங்கியுள்ளன.
முன்னணி நடிகர்களின் படங்களுக்காக கயாடு லோஹர் அணுகப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அந்த வகையில், சமீபத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள சிம்பு படத்தில்தான் கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க கல்லூரி பின்னணியில் கதையினை உருவாகிவரும் இந்த சிம்பு படத்தில் கயாடு லோஹருக்கு வெயிட்டான கதாபாத்திரமாம்.
சிம்பு - கயாடு லோஹர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.