Published on : 21 Feb 2025 19:23 pm
நடிகை கீர்த்தி பாண்டியனின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், 2019-ல் ‘தும்பா’ படம் மூலம் திரையில் அறிமுகமானார்.
பாலே, சால்சா போன்ற வெளிநாட்டு நடனங்களையும் கற்றுத் தேர்ந்தவர். தனது தந்தை அருண் பாண்டியனுடன் ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ஜீ5 ஓடிடியில் வெளியான ‘போஸ்ட்மேன்’ என்ற வெப் தொடரில் நடித்தார்.
அசோக் செல்வனுடன் இவர் நடித்த ‘ப்ளூ ஸ்டார்’ படம் பெரும் வெற்றி பெற்றது.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்றது.