Published on : 19 Feb 2025 13:13 pm
தனது இன்ஸ்டா பக்கத்தில் பர்சனல் தருணங்களில் அவ்வபோது பகிரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அப்டேட் செய்துள்ள மணக்கோல புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.
“இதயம் ரெண்டும் இசையெனவே / இன்றே இன்றே இணைகிறதே / நட்பே காதல் துணையெனவே / காலம் எல்லாம் வருகிறதே” என்று கீர்த்தி சுரேஷ் பதிந்துள்ள கவித்துவ வரிகளும் கவனம் ஈர்த்துள்ளன.
கடந்த டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
“ஆர்குட் காலத்திலேயே அவரை தெரியும். அப்போது நான் தான் முன்னெடுத்து அவருடன் பேசத் தொடங்கினேன். ஒரு மாத காலத்துக்கு சாட்டிங் செய்தோம்” என்றார் கீர்த்தி சுரேஷ்.
“முதன்முதலில், 2010-ம் ஆண்டு என்னைக் காதலிப்பதாகக் கூறினார். 2016-ம் ஆண்டில் தான் எங்களுடைய காதல் தீவிரமடைந்தது” என்பது அவரது ஸ்டேட்மென்ட்.
“இப்போது என் இதயம் நிறைந்துள்ளது. திருமணம், எங்களுக்கு உணர்ச்சிமிக்க தருணமாக இருந்தது” என்று நெகிழ்ந்தார் கீர்த்தி சுரேஷ்.
“என்னை திருமணம் செய்து கொள்வது இந்த மனிதரின் அதிர்ஷ்டம் என்று யாராவது நினைத்தால், உண்மையில், அவரைத் திருமணம் செய்தது தான் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்பதும் கீர்த்தி சுரேஷின் ஸ்டேட்மென்ட்தான்.