Vidaamuyarchi review points
Vidaamuyarchi review points

விடாமுயற்சி: ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

Updated on
2 min read

அஜித் எந்த பில்டப்பும் இல்லாமல் மிகச் சாதாரணமாக அறிமுகம் ஆவது தொடங்கி, கமர்ஷியல் தன்மைகள் வலிந்து திணிக்காதது மிகப் பெரிய ப்ளஸ்.

த்ரிஷாவுக்கான காட்சிகள் குறைவு என்பதும், அஜித் - அர்ஜுன் மோதல் பெரிதாக தெறிக்கவிடாததும் ஏமாற்றத்துக்குரிய மைனஸ்.

இடைவேளை ட்விஸ்ட் வரை ஹாலிவுட் பாணியில் பரபரப்புக்கும் முதல் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதையே ‘விடாமுயற்சி’யின் முக்கிய ப்ளஸ்.

2-ம் பாதியின் தொடக்கத்திலேயே இடைவேளை ட்விஸ்டை உடைத்ததும், அதனால் எங்கேஜிங் தன்மை பாதித்ததும் அடுத்த மைனஸ். 

ஆரவ் - அஜித் காட்சிகள் மற்றும் அர்ஜுன், ரெஜினா அறிமுகம், அவர்களின் பின்னணி என அடுத்தடுத்து வரும் காட்சிகளே திரைக்கதைக்கு ப்ளஸ். 

அஜித்தின் தேடல் காட்சிகள் சலிப்பைத் தரும் வகையில், கதை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுத்துவது திரைக்கதையில் மைனஸ்.

நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் மிளிரும் அஜித்தின் மூன்று விதமான ‘கிளாஸ்’ ஆன லுக்கும், அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸும் மிகப் பெரிய ப்ளஸ்.

த்ரில்லர் கதைக் களத்துக்கே உரிய புத்திசாலித்தனமான காட்சிகள் அதிகமின்றி திரைக்கதை ஊர்ந்து செல்வது மைனஸ். 

புழுதி வீசும் அஜர்பைஜான் நிலப்பரப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கும் ஓம் பிரகாஷின் கேமராதான் ‘விடாமுயற்சி’க்கு பெரும் ப்ளஸ். 

விறுவிறுப்பான முதல் பாதிதான் முக்கிய ப்ளஸ் என்றால், ஜவ்வாக இழுக்கப்படும் இரண்டாம் பாதிதான் ‘விடாமுயற்சி’யின் மைனஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in