Published on : 04 Feb 2025 16:36 pm

டெஸ்ட் to அக்கா: நெட்ஃப்ளிக்ஸ் அணிவகுப்பு @ 2025

Published on : 04 Feb 2025 16:36 pm

1 / 10

2025-ஆம் ஆண்டில் தமது ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள முக்கிய படைப்புகள் குறித்த மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். அதில் குறிப்பிடத்தக்கவை...

2 / 10

டெஸ்ட்: மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் படம் இது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சசிகாந்த் இயக்கியுள்ளார்.

3 / 10

மண்டலா மர்டர்ஸ்: கோபி புத்ரன், மானன் ராவத் இயக்கத்தில் வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா நடித்துள்ள மர்மம் சூழ்ந்த க்ரைம் த்ரில்லர் வெப் வெப் சீரிஸ்.

4 / 10

டப்பா கார்டெல்: ஷபானா ஆஸ்மி, ஜோதிகா, ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன், அஞ்சலி ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் சீரிஸ். 

5 / 10

ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ள ‘டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ், தானேவில் வாழும் 5 சராசரி குடும்பத்து பெண்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. 

6 / 10

க்ளோரி: கரண் அன்ஷுமன், கர்மான்யா அஹுஜா இயக்கத்தில் சுவிந்தர் விக்கி, திவ்யேந்து உள்ளிட்டோர் நடித்துள்ள இத்தொடர் குத்துச் சண்டையை மையமாக கொண்டது. 

7 / 10

அக்கா: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 / 10

80-களில் தென்னிந்தியாவில் நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ள  வெப் சீரிஸ்தான் ‘அக்கா’.

9 / 10

சூப்பர் சுப்பு: சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய வெப் தொடர். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் இந்த முதல் தெலுங்கு வெப் சீரிஸை மல்லிக் ராம் இயக்கியுள்ளார்.

10 / 10

நெட்ஃப்ளிக்ஸின் மற்ற அறிவிப்புகள்: ‘டோஸ்டர்’, ‘ஜுவல் தீஃப்’, ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’, ‘கோர்ரா: சீசன் 2’ மற்றும் ‘டெல்லி க்ரைம்: சீசன்3’.

Recently Added

More From This Category

x