Published on : 27 Jan 2025 18:09 pm
நடிகை மீனாட்சி சவுத்ரி தனது துபாய் ட்ரிப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி.
அதன்பின், தீபாவளிக்கு வெளியான‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ திரைப்படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார் மீனாட்சி சவுத்ரி.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ திரைப்படம் தான் மீனாட்சி சவுத்ரியின் முதல் தமிழ் திரைப்படம்.
இளம் நடிகையாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி.
வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸாகி செம்ம ஹிட்.
‘சங்கராந்தி வஸ்துன்னம்’ படத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு வெயிட்டான ரோல். அதில் மிரட்டியிருந்தார்.
‘த கோட்’ படம் தந்த பாடத்தால் ‘இனி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும்’ என்று அவர் முடிவெடுத்தது கவனிக்கத்தக்கது.
பிஸியான ஷெட்யூலுக்கு இடையில் துபாயில் அவர் ஹாயாக வலம் வருகிறார். அத்துடன், அது தொடர்பான படங்களையும் பகிர்ந்து தனது ‘வைப்’ அனுபவத்தை ரசிகர்களுக்கும் கடத்தி வருகிறார்.