Published on : 27 Jan 2025 17:17 pm
பிரபல இந்தி நடிகை ஆலியா பட். இயக்குநர் மகேஷ் பட் மகளான இவர் கல்லி பாய், கங்குபாய் கதியவாடி, ஆர்ஆர்ஆர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
‘கங்குபாய் காதியவாடி’ என்ற நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்திப் படம் இவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது.
சமீபத்தில் தனது பெயரை ஆலியா பட் கபூர் என அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொண்டார்.
நடிகை ஆலியா பட், ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
2024-ல் இவரது நடிப்பில் வெளிவந்த ‘ஜிக்ரா’ பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
2025-ல் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ‘ஆல்ஃபா’ படத்துக்காக ஆலியா பட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
‘ஸ்பை’ வகை ஆக்ஷன் - த்ரில்லராக உருவாகி வரும் ‘ஆல்ஃபா’ படத்தில் ஆலியாவுக்கே முதன்மைக் கதாபாத்திரம்.
இடையிடையே, ஆலியா பட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.