Published on : 19 Jan 2025 19:19 pm
ஓடிடி தளங்களில் வெளியாகி இப்போது (ஜனவரி 2025) காணக் கிடைக்கும் கவனத்துக்குரிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்களின் பட்டியல்...
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்த அரசியல் த்ரில்லர் டிராமா ‘விடுதலை பாகம் 2’ @ அமெசான் ப்ரைம் வீடியோ
ஆஷிக் அபு இயக்கத்தில் ஸ்டார் பட்டாளங்களுடன் மாஸ் + ஆக்ஷன் பேக்கேஜாக தியேட்டரில் கல்லா கட்டிய மலையாள படம் ‘Rifle Club’ @ நெட்ஃப்ளிக்ஸ்
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜோஜூ ஜார்ஜ் முத்திரைப் பதித்த மலையாள படம் ‘Pani’ @ Sony LIV
அபிஷேக் பச்சன் நடித்துள்ள உறவுச் சிக்கல்களை உள்ளடக்கிய எமோஷனல் டிராமா இந்தி படம் ‘I Want to Talk’ @ அமேசான் ப்ரைம் வீடியோ.
வெவ்வேறு கதை மாந்தர்களின் பிரச்சினைகளை பிணைக்கும் ராகுல் இயக்கிய தெலுங்கு படம் ‘Mokshapatam’ @ ஆஹா ஓடிடி தளம்
ஜேமி ஃபாக்ஸ், கேமரூன் டயஸ் நடித்த ஆக்ஷன் நிறைந்த சஸ்பென்ஸ் கதைக்களம் கொண்ட ‘Back in Action’ @ நெட்ஃப்ளிக்ஸ்
அரசு, காவல் துறை சிஸ்டம், நாகலாந்து பின்புலத்தில் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் ‘Paatal Lok Season 2’ @ அமேசான் ப்ரைம் வீடியோ
திஹார் சிறைக் களத்தின் குற்றக் கதைகளுடன் நேர்த்தியாக ஈர்க்கும் விறுவிறுப்பான பீரியட் டிராமா வெப் சீரிஸ் ‘Black Warrant’ @ நெட்ஃப்ளிக்ஸ்
நஸ்ரியா, பசில் ஜோசப் நடிப்பில் கவனம் ஈர்த்த சஸ்பென்ஸ் த்ரில்லர் மலையாளத் திரைப்பம் ‘Sookshmadarshini’ @ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்
டார்க் காமெடி முயற்சியுடன் கூடிய மிர்ச்சி சிவா நடித்த படம் ‘சூது கவ்வும் 2’ @ அமேசான் ப்ரைம் வீடியோ
இரு நண்பர்களின் கடன் பிரச்சினைகளை மையமாக கொண்ட சுவாரஸ்ய கதையுடனான மலையாள படம் ‘Kadam Kadha’ @ ப்ரைம் வீடியோ