Published on : 16 Jan 2025 16:31 pm

காதலிக்க நேரமில்லை: ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

Published on : 16 Jan 2025 16:31 pm

1 / 11

ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘புதுமை’யான கதைக்களம் கொண்ட ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ப்ளஸ் மைனஸ் ரிவ்யூ இது.

2 / 11

ஆண் துணையின்றி குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பெண், மண வாழ்க்கையில் குழந்தை தேவையில்லை என நினைக்கும் ஆண், அவருக்கு நண்பராக பால் புதுமையினர்...

3 / 11

இப்படியாக, இன்றைய ‘இசட் ஜென்’ தலைமுறையினரிடையே துளிர்விடும் கலாச்சாரத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி கதைக் களமாக்கி இருப்பது துணிவான முயற்சி.

4 / 11

சிக்கலான கதைக் களம் என்றாலும் முடிந்தவரை சுவாரஸியமாகத் தர முயன்று, ஆனால், ஆங்காங்கே வெளிப்படும் ஆழமில்லாத காட்சிகளால் படம் தடுமாறுகிறது.

5 / 11

‘ஸ்பெர்ம் டோனர்’ மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண், தன் குழந்தைக்கு தந்தை யாராக இருக்கும் என நினைத்துக் குழம்புவதை யதார்த்தமாக காட்சிப்படுத்தி உள்ளனர். 

6 / 11

திருமணப் பந்தம், குழந்தை தேவையில்லை என்று நாயகன் சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. பிளே பாயாக மாறும் காட்சிகள் ஒட்டவில்லை.

7 / 11

படத்தில் ஒருவித அந்நியத்தன்மை தொற்றிக்கொள்வது ஈடுபாட்டை குறைக்கிறது.  முதல் பாதிக்குப் பிறகு ஸ்பீடு பிரேக் போட்டது போல காட்சிகள் நகர்வது இன்னொரு குறை. 

8 / 11

சிங்கிள் பேரன்டிங், பால் புதுமையினர் பேரன்டிங், விந்து தானம், தன்பாலின திருமணம் போன்ற விஷயங்களை துணிச்சலுடன் பேசியது தமிழ்ச்  சூழலில் நல்ல முன்முயற்சி.

9 / 11

நாயகனாக ரவி மோகனும் கச்சிதமாக நடித்துள்ளார். அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் நித்யா மேனன், பால் புதுமையினராக வினய் ராய் துணிந்து நடித்துள்ளார். 

10 / 11

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கெனவே சில பாடல்கள் ஹிட். பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு கை கொடுத்திருக்கிறது. 

11 / 11

கதைக்களம் புதிது என்றாலும், உணர்வுபூர்வ காட்சிகள், சுவாரஸ்ய திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் ‘காதலிக்க நேரமில்லை’ நிச்சயம் வேற லெவல் சென்றிருக்கும்.

Recently Added

More From This Category

x