Published on : 13 Jan 2025 17:23 pm
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து வெளியான சுந்தர்.சி - விஷால் - சந்தானம் கூட்டணியின் ‘மதகஜராஜா’ படத்தைப் பார்த்து ரசிக்க 10 காரணங்கள் இதோ...
நண்பர்களின் பிரச்சினைகளைச் சகல வல்லமை கொண்ட ‘மதகஜராஜா’ எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதை எக்கச்சக்க காமெடி, ஆக்ஷனோடு சொல்கிறது கதை.
சுந்தர்.சி தனது வழக்கமான டெம்ப்ளேட்களை கொண்டே ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம்.
ஆடியன்ஸ் மத்தியில் எடுபடும் என்ற ‘பல்ஸ்’ அறிந்து, காமெடி + மசாலாவை ஓவர்டோஸ் ஆகிவிடாமல் சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.
முதல் பாதி முழுவதும் ஹீரோவும், அவரது நண்பர்களும் செய்யும் சேட்டைகள், ரொமான்ஸ் காட்சிகள் காட்சிகள் என கலகலப்பாக செல்கிறது படம்.
சந்தானத்தின் ‘வின்டேஜ்’ நையாண்டிகள், ஒன்லைன் கவுன்டர்கள் பெரிய பலம். பழைய சந்தானத்தை ஆடியன்ஸ் எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பதை உணரலாம்.
முதல் பாதி முழுவதும் சந்தானத்துக்கும், அவரது மாமியாராக வரும் கே.எஸ்.ஜெயலட்சுமிக்கும் இடையிலான காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் சீரியஸ் மோடுக்கு மாறினாலும், மீண்டும் சந்தானம் வந்த பிறகு அதே ‘கலகல’ பாணிக்கு திரும்பி விடுகிறது.
மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு, சீனு மோகன் என மறைந்த நடிகர்கள் பலரையும் பெரிய திரையில் மீண்டும் பார்ப்பது நெகிழ்வை தரவல்லவை.
க்ளைமாக்ஸுக்கு முன்னால் மனோபாலாவின் சடலத்தை வைத்துக் கொண்டு விஷாலும், சந்தானமும் செய்யும் அலப்பறைகள் அதிரடி சரவெடி ரகம். தியேட்டரில் சிரிப்பலை உறுதி.
மொத்தத்தில் சுந்தர்.சி படங்களில் வரும் வழக்கமான அபத்தங்கள் இதிலும் உண்டு என்றாலும் அவை எந்த இடத்திலும் ஓவர்டோஸ் ஆகாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் மறைந்து போய் விடுகின்றன. முன்பே குறிப்பிட்டது போல இது
12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் என்பதை மட்டும் மனதில் கொண்டு, முன்முடிவின்றி பார்த்தால் ‘காமெடி சரவெடி’க்கு உத்தரவாதம் தருவார் இந்த ‘மதகஜராஜா’.