Published on : 27 May 2024 20:45 pm

ஓடிடியில் தவறவிடக் கூடாத 10 இந்தி படங்கள்!

Published on : 27 May 2024 20:45 pm

1 / 10
லாபத்தா லேடீஸ் (Laapataa Ladies): திருமணம் முடிந்து ஊர் திரும்பும் இரண்டு தம்பதிகளின், மனைவிகள் மாறிவிடுகின்றன. அவர்களைத் தேடி அலைவதே படத்தின் கதை. பிற்போக்குத்தனங்கள், ஆணாதிக்கம், குடும்ப வன்முறைகளை நகைச்சுவையுடன் கிழித்து தொங்கவிடும் படைப்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
2 / 10
ஜோரம் (Joram): தான் செய்யாத கொலையில் தன்னை சிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க கட்டுமானத் தொழிலாளி ஒருவர் தனது 3 மாத குழந்தையுடன் ஓடுகிறார். இந்த பின்னணியில் என்ன நடந்தது என்பதே ‘ஜோரம்’. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. வளர்ச்சித்திட்டங்களுக்காக காவு வாங்கப்படும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்கிறது படம்.
3 / 10
அமர் சிங் சம்கிலா (Amar Singh Chamkila): 27 வயதில் சுட்டுக்கொல்லப்பட்ட மேடைப் பாடகர் அமர் சிங் சம்கிலாவின் வாழ்க்கையைப் பேசும் இப்படைப்பு நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. கலைஞனின் வாழ்க்கையில் நிகழும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சுவாரஸ்யம் குன்றாமல் வெளிப்படுத்தும் படத்தின் மற்றொரு ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான்.
4 / 10
மஸ்த் மெயின் ரெஹ்னா கா (Mast Mein Rehne Ka): வாழ்வின் வெறுமையில் மூழ்கி கிடக்கும்போது, எங்கிருந்தோ வந்த கை ஒன்று தோளைத் தட்டி, “இது வாழ்க்க நமக்கு கொடுத்த ரெண்டாவது சான்ஸ்” என சொல்லும் அதை உணர்த்தும் ஃபீல்குட் படைப்பு அமேசான் ப்ரைமில் உள்ளது.
5 / 10
12த் ஃபெயில் (12th Fail): 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் எப்படி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெறுகிறான் என்பது படம். விடாமுயற்சியையும், கடின உழைப்பின் பயனையும் உணர்த்தும் படைப்பு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
6 / 10
ஒஎம்ஜி 2 (OMG 2): பாலியல் கல்வியின் அவசியம் குறித்து பேசும் இப்படம், அதைப்பயன்படுத்தி நடக்கும் மோசடிகளையும் தோலுரிக்கிறது. சுய இன்பம் செய்ததற்காக பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மகனுக்காக வாதாடும் தந்தையின் போராட்டம் தான் படம். அதன் வழியே பல விஷயங்களை உரையாடும் படைப்பு. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் உள்ளது.
7 / 10
ஜானே ஜான் (Jaane Jaan): தற்காப்புக்காக கணவனை கொன்றுவிடும் மனைவி. அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை தான் படம். த்ரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற படம், பதைபதைப்புடன் சுவாரஸ்யமாக நகர்கிறது. ‘த்ரிஷ்யம்’ பாணி திரைக்கதைதான். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காண முடியும்.
8 / 10
ஜாய்லேண்ட் (Joyland): நடனக் குழுவின் தலைவியான திருநங்கை பிபா (அலினா கான்) உடன் ஹைதர் காதலில் வீழ்கிறார். இது அந்த குடும்பத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ‘ஜாய்லேண்ட்’ படத்தின் கதை. முபி மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ (ரென்ட்டல்) காணக்கிடைக்கிறது. உணர்வுப்பூர்வமான களம் பல களங்கடிக்க வைக்கும்.
9 / 10
‘ஆஃப்வா’ (Afwaah): சமூக வலைதளத்தில் பரப்பப்படும் ஒரு வதந்தி எப்படி கலவரமாக மாறுகிறது என்பதுதான் கதை. நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. சமூக ஊடக அரசியல் அவலத்தையும், வதந்தியின் வீரியத்தையும் அழுத்தமாக பேசும் படம் சமகாலத்துக்கு தேவையான முக்கியமான படைப்பாக ஈர்க்கிறது.
10 / 10
பீட் (Bheed): கரோனாவின் துயரையும், அதில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வலியையும் பேசும் படைப்பு. புலம்பெயர் தொழிலாளர்களை வரிசையாக அமர வைத்து சானிடைசர் அடிப்பது, முஸ்லிம்கள் உணவு கொடுக்கும்போது அதனை மற்றவர்கள் வாங்க மறுப்பது என அரசியலை அழுத்தமாக பேசுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

Recently Added

More From This Category

x