Published on : 08 Nov 2023 16:25 pm
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அர்த்திகா. மலையாள படங்களின் மூலம் திரைத் துறையில் அறிமுகமான இவர், ‘ப்ளாக் அன்ட் வொயிட்’ என்ற தமிழ் படத்தில் கார்த்திக் ராஜூடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பானது.
இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் தற்போது கதாநாயகியாக நடித்துகொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் கார்த்திக் ராஜூடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார். இந்த ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த 6-ம் தேதி கேரளாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை அர்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “என் வாழ்வின் சிறந்த தருணங்கள்” என கேப்ஷனிட்டுள்ளார்.