Published on : 06 Nov 2023 11:16 am

நடிகை அமலா பால் திருமணம் - சிறப்பு ஆல்பம்

Published on : 06 Nov 2023 11:16 am

1 / 12
நடிகை அமலா பாலுக்கு கேரள மாநிலம், கொச்சியில் நேற்று (நவ. 5) திருமணம் நடைபெற்றது.
2 / 12
நடிகை அமலா பால் தமிழில், மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
3 / 12
இவர் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
4 / 12
திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
5 / 12
இந்நிலையில் அக். 26-ம் தேதி அமலா பால் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று அவர் நண்பர் ஜெகத் தேசாய், காதலை வெளிப்படுத்தி அவருக்கு மோதிரம் அணிவித்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
6 / 12
தற்போது கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் இருவரும் அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
7 / 12
8 / 12
9 / 12
10 / 12
11 / 12
12 / 12

Recently Added

More From This Category

x