1 / 18
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா சபாஸ்டின், மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் 'பிக் பாஸ்' ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.
2 / 18
நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கின் நடுவே விருந்தினர்கள் நடந்து செல்வதற்காக ‘ராம்ப்’ (Ramp) அமைக்கப்பட்டது.
3 / 18
படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இந்த வெற்றிவிழா தொடங்கியது முதலே பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பிரபலங்கள் ஒவ்வொருவராக வரவர பெரும் ஆரவார ஒலிகளை எழுப்பினர்.
4 / 18
இத்துடன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு டி.ஜே.கவுதமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய்யின் பல்வேறு பாடல்கள் ஒலிபரப்பப் பட்டன. இசையமைப்பாளர் அனிருத் வெளிநாடு சென்றிருப்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
5 / 18
’லியோ’ படம் ஆரம்பிக்கப்பட்டபோது வெளியான பூஜை வீடியோ, காஷ்மீர் படப்பிடிப்பு வீடியோக்கள் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
6 / 18
நடிகை த்ரிஷாவின் 20 ஆண்டு திரைப்பயண வீடியோவும் திரையிடப்பட்டது.
7 / 18
விழா அரங்குக்கு ரசிகர்களின் கைதட்டல்களுக்கு நடுவே இயக்குநர் லோகேஷ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன், த்ரிஷா என ஒவ்வொருவராக வந்தனர்.
8 / 18
இறுதியாக நடிகர் விஜய் கையசைத்து நடந்து வரும்போது மொத்த அரங்கமே அதிரும்படி ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.
9 / 18
இயக்குநரும் ‘லியோ’ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் பேசியபோது, விஜயை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த விஜய், ரத்னகுமாரை கட்டியணைத்து வாழ்த்தினார்.
10 / 18
மிஷ்கின் பேசுகையில், வாழ்க்கையில் நான் புரூஸ்லீ மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் நான் கண்ணால் பார்த்த ஒரு லெஜண்ட்” என்றார்.
11 / 18
படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது உதவி இயக்குநர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி கவுரவித்தார்.
12 / 18
விஜய் மேடையில் அமர்ந்திருந்தபோது ரசிகை ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இந்த புகைப்படம் கடும் வைரலானது.
13 / 18
அர்ஜுன் பேசுகையில், “9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே விஜய் செட்டுக்கு வந்துவிடுவார். அவரிடம் தலைவருக்கான தகுதிகள் உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்றார்.
14 / 18
‘லியோ’வில் விஜயின் மகளாக நடித்த பேபி இயல், மேடையில் பேசும்போது, ‘விஜயை மிஸ் செய்கிறேன்’ என்று கூறி எமோஷனலாகி அழுதபோது, விஜய் ஓடிச் சென்று அவரை தூக்கி வைத்துக் கொண்டது க்யூட் மொமெண்ட்.
15 / 18
இறுதியாக பேசவந்த விஜய், மேடையேறும்போதே, ‘ரஞ்சிதமே’ ஸ்டைலில் தனது ஃப்ளையிங் கிஸ்ஸை ரசிகர்களுக்கு பறக்கவிட்டார். பின்னர் ‘நான் ரெடிதான் வரவா’ என்ற பாடலைப் பாடி தனது பேச்சை தொடங்கினார்.
16 / 18
தனது வழக்கமான குட்டிக் கதையை விஜய் சொல்லத் தொடங்கி, ஒரு காட்டில் மான், மயில், முயல் என்று சொல்லிக் கொண்டே வந்து, ‘காக்கா, கழுகு’ என்று அழுத்திச் சொன்னதும் அரங்கமே ஆர்ப்பரிப்பில் அதிர்ந்தது.
17 / 18
“எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்க தான் பண்ணி இருப்பாங்க. அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை” என்று தனது எதிர்கால விருப்பத்தையும் தனது உரையின் இடையே முன்வைத்தார் விஜய்.
18 / 18
இறுதியாக, புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-ன்னா அது ஒருத்தர் தான். அதே போல ‘தளபதி’க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியும். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்கள். நான் செய்கிறேன்” என்று தன்னுடைய ‘அரசியலை’ அழுத்தமாக முன்வைத்து தனது பேச்சை நிறைவு செய்தார்.