1 / 26
பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.
2 / 26
லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
3 / 26
நேற்று (ஆக 25) சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதில் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் பேசியதாவது: “இந்தப் படத்தின் கதையை பி.வாசு என்னிடம் சொன்னபோதே எனக்கு பிரம்மாண்டம்தான் தெரிந்தது. இந்தப் படம் தொடங்கி முடியும் வரை ரஜினி சாரின் ஆசிர்வாதம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது.
4 / 26
அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன்” இவ்வாறு அவர் கூறினார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
5 / 26
இந்நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன், நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
6 / 26
முன்னதாக நடிகர் வடிவேலு, “ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.
7 / 26
இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி. இந்த ரெண்டு படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்தப் படத்தில் பார்க்கப்போகும் வடிவேலு வேறு மாதிரி இருப்பார்.
8 / 26
முதலில் ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சிறிது நாட்களுக்கு முன்பு என்னை வரவிடாமல் கதவை பூட்டு போட்டு சாவியை தூக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதுக்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
9 / 26
அந்த கதவை உடைத்து புது சாவியை கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் சுபாஷ்கரன். தெய்வத்துக்கு பிறகு தெய்வமா சுபாஷ்கரனைத் தான் வணங்குகிறேன்.
10 / 26
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்கிறேன்” என்றார்.
11 / 26
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் பேசுகையில், “விடாமுயற்சி எங்களுக்கு முக்கியமான படம். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இனி தாமதமாகாது” என தெரிவித்துள்ளார்.
12 / 26
13 / 26
14 / 26
15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
24 / 26
25 / 26
26 / 26