Published on : 28 May 2023 14:34 pm
ஆண்டுதோறும் நடக்கும் IIFA விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதில் இந்திய சினிமாவில் சிறந்த சாதனைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.
புஷ்கர் காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா திரைப்படத்துக்காக ஹ்ரித்திக் ரோஷனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது
ராக்கெட்: தி நம்பி எஃபெக்ட் படத்துக்காக ஆர்.மாதவனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
ஜக் ஜக் ஜீயோ திரைப்படத்துக்காக அனில் கபூருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது
பிராந்திய சினிமாவில் சிறந்த சாதனைக்கான விருது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒரிஜினல் கதைக்கான விருது டார்லிங்ஸ் திரைப்படத்துக்காக பர்வேஸ் ஷேக் மற்றும் ஜஸ்மீத் ரீன் இருவருக்கும் வழங்கப்பட்டது.
மேடையில் குழந்தைகளுடன் நடனமாடிய நடிகர் சல்மான் கான்
மேடையில் நடனமாடிய நடிகை கீர்த்தி சனோன்
காலா (Qala) படத்துக்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றார் மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான்.
பிரம்மாஸ்திரா படத்தில் இடம்பெற்ற ரங் ரஸியா பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ஷ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசனுடன் சல்மான் கான்