பிரபல யூடியூபர் இர்ஃபானின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இர்ஃபான் வியூஸ் என்ற யூடியூப் பக்கத்தின் மூலம் பிரபலமானவர் இர்ஃபான். உள்நாடு வெளிநாடு என பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள உணவு குறித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இவரை யூடியூபில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
தனது திருமணத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக எம்.பி. கனிமொழி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரையும் நேரில் சென்று அழைத்திருந்தார் இர்ஃபான்.