Published on : 07 Feb 2023 19:42 pm
நந்தா, திருடா திருடி, பிதாமகன், யாரடி நீ மோகினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருவிளையாடல் ஆரம்பம் என பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் கருணாஸ்.
ஹீரோவாக திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ஆதார் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அதேபோல் அரசியலிலும் களமிறங்கி அதிலும் தனது முழு கவனத்தை காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் - க்ரேஸ் கருணாஸ் தம்பதிகளின் மகள் டையானாவின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.