Published on : 10 Feb 2025 00:24 am

எப்படி இருக்கிறது திருச்சி பறவைகள் பூங்கா? - ஸ்பாட் விசிட் க்ளிக்ஸ் by ர.செல்வமுத்துகுமார்

Published on : 10 Feb 2025 00:24 am

1 / 30

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

2 / 30

இந்த பூங்காவில் 60,000 சதுரஅடி பரப்பளவில் ஐந்திணை நில அமைப்புகளை விவரிக்கும் வகையில் அந்த நிலப்பகுதிகளுக்கான அடையாளங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பல்வேறு வண்ணங்களால் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான  நூற்றுக்கணக்கான பறவைகள் விடப்பட்டுள்ளன

3 / 30

இங்கு பார்வையாளர்கள் பறவைகளுக்கான பிரத்யேக உணவினை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பறவைகள் தங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

4 / 30

சுருள் ரெக்கை (FRILL BACK), பொமேரியன் பெளட்டர் (Pomeranian Pouter), கேடய பௌட்டர் (SHIELD POUTER), கிளி மூக்கு (SCANDAROON, வைர புறா (DIAMOND DOVE), நீண்ட முகம் டம்ளர் (Long Face Tumbler), கட்ட வால் (MALTESE), உள்ளிட்ட பல்வேறு புறா வகைகள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

5 / 30

பூங்காவில் கூடுதலாக 7-டி மினி திரையரங்கில் பார்வையாளர்களுக்கு திரையிடப்படும் படங்கள் முப்பரிமாண காட்சிகளாக அருகில் தெரிவதுடன், காட்சிகளின் அமைப்பிற்கு ஏற்ப தங்களைச் சுற்றி ஈரமாக உணர்வது, தங்கள் உடலை காற்று தழுவுவது, அதிர்வுகளை உணர்தல் உள்ளிட்ட சிறப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

6 / 30

இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

7 / 30

இந்த பூங்காவினை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

8 / 30
9 / 30
10 / 30
11 / 30
12 / 30
13 / 30
14 / 30
15 / 30
16 / 30
17 / 30
18 / 30
19 / 30
20 / 30
21 / 30
22 / 30
23 / 30
24 / 30
25 / 30
26 / 30
27 / 30
28 / 30
29 / 30
30 / 30

Recently Added

More From This Category

x