Published on : 29 Jan 2025 19:17 pm
திருச்சி மலைக்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள சாரண சாரணியர் இயக்க வைர விழா நுழைவு வாயில். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
பல்வேறு மாநிலங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாரண, சாரணியர்கள்.
இசை கருவிகள் முழங்கியபடி அணிவகுத்து சென்ற தமிழக மாணவர்கள்.
இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்ட சாரண, சாரணியர்கள்.
சவுதி அரேபியாவில் இருந்து வந்து கலந்து கொண்ட சாரண, சாரணியர்கள்.
மலேசியா நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்ட சாரண, சாரணியர்கள்.
சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
மணப்பாறை சிப்காட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அரங்கம்"
கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர்.
விழா அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலை.
சாரணர் உடை அணிந்தபடி நிற்கும் வரையாடு பொம்மை.
சாரண, சாரணியர்களின் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டை பாலங்கள்.
மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்க அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள்.
கூடாரத்தில் ஓய்வெடுக்கும் பஞ்சாப் மாநில அதிகாரிகள்.
தொடக்க விழாவில் நடனமாடிய குஜராத் மாநில மாணவிகள்.
பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா தொடக்க நிகழ்ச்சியில் கூட்டாக அணைந்து நடனமாடிய அணைத்து மாநில சாரண, சாரணியர்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரியானா மாநில மாணவர்கள்.
பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா தீபத்தை ஏற்றிவைத்து சாரண, சாரணியர் தேசிய தலைமை ஆணையர் கே.கே.கண்டேல்வாலிடம் வழங்குகிறார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சியரங்கம்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் "உலக சாரணியர் சின்னம்" வடிவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள்.
மாணவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள்.
வயது வாரியாக உள்ள சாரண சாரணியர் சீருடை.