தீவிர மழையில் திக்குமுக்காடும் டெல்டா - புகைப்படத் தொகுப்பு
Published on : 14 Dec 2024 10:45 am
1 / 13
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர் வயல்கள்.
2 / 13
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் கோணகடுங்கலாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், வெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பா, தாளடி நடவு வயல்கள்.
3 / 13
அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில், பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள ஏரி உடைந்து, அதிலிருந்து வெளியேறும் மழைநீர்.
4 / 13
மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் பகுதியில் கனமழையால் இடிந்து விழுந்த கான்கிரீட் வீடு. | படம்: வீ.தமிழன்பன் |
5 / 13
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வடுககுடியில் வாழை தோட்டத்தில் தேங்கியுள்ள மழைநீர்.
6 / 13
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள சோபனாபுரத்திலிருந்து
டாப் செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் மலை பகுதி.
7 / 13
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வரகடைப் பகுதியில் பழவாற்று வடக்கு கரையில் ஏற்பட்ட மண் அரிப்பால் சேதமடைந்துள்ள சாலை.
8 / 13
மழைநீர் நிரம்பி உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உள்பிரகாரம். | படம்: சி.எஸ்.ஆறுமுகம் |
9 / 13
திருச்சி கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்.
10 / 13
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் காவல் நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீர்.
11 / 13
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பரிவீரமங்கலம் கண்மாயில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர்.
12 / 13
கும்பகோணம் திருவள்ளுவர் நகரில் மழைநீர் சூழந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதி.
13 / 13
கும்பகோணம்-திருவையாறு சாலை கணபதியக்ரஹாரம் பிரதான சாலையில் வேருடன் முறிந்து விழுந்த 50 ஆண்டுகள் பழமையான மாமரம்.