Published on : 13 Dec 2024 21:07 pm

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண்

Published on : 13 Dec 2024 21:07 pm

1 / 36

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் பெருக்கெடுத்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. | தகவல்கள்: அ.அருள்தாசன் | படங்கள்: மு.லெட்சுமி அருண்

2 / 36

நெல்லை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 4,121 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊத்து பகுதியில் 540 மி.மீ. மழை பெய்தது. 

3 / 36

பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு பாதிக்கும் குறைவாகவே உள்ளது. கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தாலும், அதிக அளவில் வெளியேற்றப்படவில்லை. அணைகளில் இருந்து மொத்தம் 1,500 கனஅடி வீதம் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

4 / 36

அணைகளில் இருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், காட்டாற்று வெள்ளமும், ஊர்களில் பெய்த மழை நீரும் மட்டுமே ஆங்காங்கே உள்ள கால்வாய்கள் வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

5 / 36

கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மண்டபங்கள், மற்றும் தைப்பூசமண்டபங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கின.

6 / 36

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் நடுவில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தவாறு சென்ற தண்ணீர் . மேலும் அருகில் உள்ள கோவில்களும் ஆற்றில் மூழிகியது .

7 / 36

இதன் காரணமாக, நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லி அணைக்கட்டுக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வெள்ளத்தின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும், தாமிரபரணி கரையோரமுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

8 / 36

நெல்லை மாநகரப் பகுதிகளில் பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கியது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. தண்ணீரை வடியவைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டார்.

9 / 36

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டன.

10 / 36

திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

11 / 36

திருநெல்வேலியில் பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. 

12 / 36

ஆங்காங்கே பணிகளும் நடைபெற்றன. ஆனால் மழைநீர் ஓடைகளும், கால்வாய்களும் மராமத்து செய்யப்படாமலும், தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளன. 
 

13 / 36

இந்நிலையில், ஒருநாள் மழைக்கே திருநெல்வேலி தாக்குப்பிடிக்காமல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 
 

14 / 36

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் அதிக கனமழையின் போது தண்ணீர் தேங்கிய அதே பகுதிகள் தற்போது மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

15 / 36

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து கட்டியிருக்கும் நிலையில், தற்போதைய மழையில் பேருந்து நிலையத்தை தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. 

16 / 36

ஆய்வு என்ற பெயரில் அமைச்சரும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு செல்கிறார்கள். ஆனால் நிரந்தர தீர்வுக்கு வழி காணப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

17 / 36
18 / 36
19 / 36
20 / 36
21 / 36
22 / 36
23 / 36
24 / 36
25 / 36
26 / 36
27 / 36
28 / 36
29 / 36
30 / 36
31 / 36
32 / 36
33 / 36
34 / 36
35 / 36
36 / 36

Recently Added

More From This Category

x