தமிழகத்தில் வெள்ளப் பெருக்கில் தத்தளிக்கும் மாவட்டங்கள் - புகைப்படத் தொகுப்பு
Published on : 02 Dec 2024 16:30 pm
1 / 30
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், திருவாலங்காடு அருகே இரு தரைப்பாலங்கள் உடைந்தன. - இரா.நாகராஜன்
2 / 30
ஃபெஞ்சல் புயலால் ஏற்காட்டில் 144.4 மில்லி மீட்டர், 238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிகக் கன மழை பெய்ததால் ஏற்காடு மலை கிராமங்கள் பலவற்றில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது சேலம் ஏற்காடு சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவினால் ஏற்காடுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. - வி.சீனிவாசன்
3 / 30
4 / 30
5 / 30
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று 300 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளை சுற்றி உள்ள காட்டாறுகளை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு கிராமங்கள் காட்டாற்றினால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. - எஸ். செந்தில்
6 / 30
7 / 30
8 / 30
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் வெள்ளக்காடானது. இடம்: தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் உள்ள காவல் நிலையம் - எஸ்.கே.ரமேஷ்
9 / 30
10 / 30
11 / 30
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கிய 5 சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று (டிசம்பர் 2-ம் தேதி) ஈடுபட்டுள்ளனர்.- இரா.தினேஷ்குமார்.
12 / 30
13 / 30
14 / 30
15 / 30
16 / 30
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தொடர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.
17 / 30
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதால் திருக்கோவிலுார் சாலை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
18 / 30
வீசிய சுறைக்காற்றில் சாய்ந்த உயர் மின் அழுத்த கம்பி.ஈசிஆர் சாலை மரக்காணம்.
19 / 30
வீடுர், சாத்தனூர் அணைகள் திறப்பால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ள நீர் புதுச்சேரியில் 25க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் புகுந்துள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்பகுதிகளை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். வெள்ளத்தில் சிக்கிய நான்கு போலீஸாரை தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்டது.
20 / 30
21 / 30
22 / 30
9 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியை நினைவு கூறுவது போன்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து, முன்னறிவிப்பு இல்லாமல், நள்ளிரவு திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.
23 / 30
ஃபெஞ்சல் புயல் தாக்குதலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. ஜவ்வாதுமலையிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா நதி அணையில் இருந்து செய்யாறு, செண்பகத்தோப்பு அணையில் இருந்து கமண்டல நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. - இரா.தினேஷ்குமார்
24 / 30
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
25 / 30
26 / 30
27 / 30
28 / 30
29 / 30
30 / 30