புதுச்சேரியை புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல், மழை வெள்ள பாதிப்புகள் - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்
Published on : 01 Dec 2024 17:04 pm
1 / 30
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் புதுச்சேரி - சென்னை நெடுஞ்சாலையில் நடுவே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி. படங்கள்: எம்.சாம்ராஜ்
2 / 30
பலத்த சூறைக்காற்று வீசியதில் உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததில் அருந்து கிடக்கும் மின்சார கேபிள்கள். இடம்: கோரிமேடு
3 / 30
பலத்த மழை வெள்ளத்தில் சிக்கிய பஸ். இடம்: எல்லைப்பிள்ளைச்சாவடி
4 / 30
குடைகளைப் பிடித்து இழுக்கும் பலத்த சூறைக்காற்று. இடம்: பெரியார் நகர்
5 / 30
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.
6 / 30
புதுச்சேரி - கடலுார் சாலையில் தேங்கிய மழை நீரில் தத்தளித்து வரும் வாகனங்கள்.
7 / 30
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் நெல்லித்தோப்பு சாலையில் கொட்டும் மழையில் தத்தளித்து வரும் வாகனங்கள்.
8 / 30
இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் தேங்கிய வெள்ள நீர்.
9 / 30
ஃபெஞ்சல் புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முதலியார்பேட்டை மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள்.
10 / 30
புதுச்சேரி ரயில் நிலையத்தில் புகுந்த மழை வெள்ளம் நீர்.
11 / 30
புதுச்சேரி ஓயிட் டவுண் சப்ரன் வீதியில் சாலையில் விழுந்து கிடக்கும் மரம்.
12 / 30
மிஷன் வீதியில் சாலையின் நடுவே விழுந்த மரத்தை அகற்றும் நகராட்சி துறையினர்.
13 / 30
எஸ்வி. பட்டேல் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பொதுப்பணித் துறையினர்.
14 / 30
ரெயின்போ நகரில் சூழ்ந்த வெள்ளநீரை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
15 / 30
ரெயின்போ நகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்.
16 / 30
வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தை நோக்கி பொருட்களை எடுத்துச் செல்லும் வெளி மாநிலத்தவர்கள். இடம்: ரெயின்போ நகர்.
17 / 30
மழை வெள்ளத்தில் மிகுந்த சிரமத்துடன் குடிநீர் கேனை தூக்கிச் செல்லும் நபர். இடம்: செல்லான் நகர்.
18 / 30
வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு செல்லும் தீயணைப்பு வீரா்கள்
19 / 30
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி.
20 / 30
வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய வயதானவர்களை படகில் மீட்டு வரும் ராணுவ மீட்பு படையினர். இடம்: கிருஷ்ணாநகர்.
21 / 30
மக்களை மீட்கும் பணியில் ராணுவம்.
22 / 30
வெள்ளத்தால் சிக்கியவர்களை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். இடம்: 45அடி சாலை, புதுச்சேரி
23 / 30
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார். இடம்: 45 அடி சாலை
24 / 30
கொட்டும் மழையில் தத்தளித்து வரும் முதியவர்.
25 / 30
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தந்தை, தாய், குழ்ந்தையும் மூன்று பேரும் பொக்லீன் வாகனத்தில் வருகின்றனர்.
26 / 30
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டள்ளன. இதனால், புதுச்சேரி வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மதிய உணவுக்கு திறந்திருந்த ஒரு சில கடைகளில் அலைமோதினர்.
27 / 30
ஃபெஞ்சல் புயலில் சாய்ந்த உயர்மின் அழுத்த கம்பிகள். | இடம்: முதலியார்பேட்டை
28 / 30
குமரகுருபள்ளம் பகுதியில் சூழ்ந்த மழை வெள்ளம்.
29 / 30
காமராஜர் சாலை சாரம் பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளநீர்.
30 / 30
புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் வீடு ஒன்றின் மீது சரிந்து விழுந்த மரம். இடம்: காமாட்சியம்மன் கோவில் வீதி.