Published on : 30 Oct 2024 18:27 pm

சென்னையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படத் தொகுப்பு

Published on : 30 Oct 2024 18:27 pm

1 / 18

சென்னையில் இன்று (புதன்கிழமை) பகல் நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. | படங்கள்: அகிலா ஈஸ்வரன், ஸ்ரீநாத்

2 / 18

கிழக்கு திசைக்காற்று வீசத் தொடங்கிய நிலையில், புறநகர் பகுதிகளில் காலை 11.45 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மாநகர் பகுதியிலும் மழை பரவியது. பின்னர் கனமழையாக கொட்டித் தீர்த்தது.

3 / 18

பிற்பகல் 12 முதல் 1 மணி வரை அண்ணாநகரில் 9 செமீ, அமைந்தகரை, பெரம்பூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 செமீ, அம்பத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 5 செமீ மழை பதிவானது. 

4 / 18

இந்த கனமழை காரணமாக அண்ணாநகர், கே.கே.நகர், கிண்டி, அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

5 / 18

கனமழை காரணமாக துணிக்கடைகளில் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. 
 

6 / 18

தீவுத்திடலில் பட்டாசு விற்பனையும் பாதிப்படைந்தது. 

7 / 18

சாலைகளில் தேங்கிய மழைநீரை வடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
 

8 / 18

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18

Recently Added

More From This Category

x