Published on : 23 Oct 2024 17:51 pm

பெங்களூருவில் தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. | படங்கள்: முரளிகுமார், சுதாகர் ஜெயின்

பெங்களூரில் கடந்த சில நாட்களாக இரவிலும் பகலிலும் கனமழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதில் அதிகபட்சமாக சவுடேஸ்வரி நகரில் 157 மிமீ, எலஹங்காவில் 141 மிமீ மழை பதிவானது.

எலஹங்கா, ஹெப்பால், ஹென்னூர், கெத்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.

தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீதிகளில் நிறுத்தப்பட்ட கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கின.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இடுப்பளவு தேங்கியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் படகு மூலம் அவர்களை மீட்டனர்.











































