கனமழையில் நிலைகுலையும் நீலகிரி - புகைப்படத் தொகுப்பு
Published on : 18 Jul 2024 20:27 pm
1 / 13
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. முழு கொள்ளளவை எட்டிய குந்தா உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. | படங்கள், தகவல்கள்: ஆர்.டி.சிவசங்கர்
2 / 13
மேல்கூடலூர் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளின் சுவர்கள் மற்றும் தரைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
3 / 13
நாடுகானி பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
4 / 13
கூடலூர் தொரப்பள்ளி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அவசிய தேவைகளுக்காக நடமாட முடியாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். வெள்ளநீர் அதிகம் சூழ்ந்துள்ள தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 48 நபர்களை தற்காலிக மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
5 / 13
கூடலூர் மக்கள் கூறும் போது,“மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காற்றும் வேகமாக வீசுகிறது. வீடுகளில் விரிசல், வெள்ளம் என அச்சத்தில் இருக்கிறோம். வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்கவும், விரிசல் தொடர்பாக புவியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர்.
6 / 13
காற்று மழையின் தாக்கம் காரணமாக கூடலூரில் வாழை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. மின்கம்பிகள் மீது மரங்கள் விழுவதால் பல பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டிருக்கிறது.
7 / 13
இத்தலாரில் மழையால் பாதித்த பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
8 / 13
9 / 13
தொடர் கனமழை காரணமாக அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
10 / 13
11 / 13
12 / 13
உதகை முள்ளிக்கொரை, தமிழகம் சாலைகளில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதடைமந்தன. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, “மழை பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.
13 / 13
மேலும், “முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறோம். குடியிருப்புகளைச் சுற்றி மழை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி மக்கள், அருகில் உள்ள முகாம்களில் தங்கலாம். மண்சரிவு மற்றும் விரிசல் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.