பட்ஜெட் 2024-க்கு முன்பாக அல்வா கிண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! - போட்டோ ஸ்டோரி
Published on : 17 Jul 2024 13:00 pm
1 / 11
2024-25 மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான நடைமுறையின் நிறைவுக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி, இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
2 / 11
பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் 'லாக்-இன்' செயல்முறை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
3 / 11
2024-25-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் 23-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்வில், மத்திய நிதியமைச்சருடன் நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
4 / 11
பூஜை சடங்குகளுடன் தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினாா்.
5 / 11
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் அச்சிடும் அச்சகத்தை பார்வையிட்டு, தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
6 / 11
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணி தொடங்கும் நிகழ்வை இந்த அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி குறிக்கிறது.
7 / 11
8 / 11
9 / 11
10 / 11
11 / 11