Published on : 08 Jul 2024 08:46 am

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் - ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி | புகைப்படத் தொகுப்பு by ம.பிரபு

Published on : 08 Jul 2024 08:46 am

1 / 56

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் புத்த மதப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். | படங்கள்: ம.பிரபு

2 / 56

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

3 / 56

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியை சேர்ந்த அவரது தம்பி பாலு (39) மற்றும் கூட்டாளிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 / 56

ஆம்ஸ்ட்ராங் உடல் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சென்னை மட்டும் அல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டு அங்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

5 / 56

உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெறமாட்டோம் என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வட சென்னை காவல்கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேச்சுவார்த்தை நடத்தினார்.

6 / 56

வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணியளவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து பெரம்பூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டது.

7 / 56

ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி அஞ்சலிக்காக பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர், ஆதரவாளர்கள் தேம்பி அழுதனர். ஏராளமானோர் நெஞ்சிலும், தலையிலும் அடித்துக் கொண்டு கதறினர்.

8 / 56

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று காலை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார்.

9 / 56

அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்களது ஆதரவாளர்களுடன் பெரம்பூரில் திரண்டனர். இதனால், பெரம்பூர் பகுதியே ஸ்தம்பித்தது.

10 / 56

ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி இடப்பற்றாக்குறை காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

11 / 56

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் மாலை 4.45 மணி அளவில் பெரம்பூரிலிருந்து பொத்தூருக்கு புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க பேரணியாக நடந்து சென்றனர்.

12 / 56

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வழிக நெடுக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக 21 கி.மீ தூரத்தை கடக்க சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் ஆனது.

13 / 56

இரவு 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் ரோஜா நகருக்கு ஊர்வலம் சென்றது. அங்கு ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் லதா என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு புத்தமத முறைப்படி இறுதிசடங்கு நடைபெற்றது.

14 / 56

கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த 7 புத்த பிட்சுகள் 5 வாசனை திரவங்கள் மூலம் அவரது உடலை தூய்மைப்படுத்தினர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு வெண்மை நிற ஆடை உடுத்தி சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

15 / 56

பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

16 / 56

எவ்வித அசம்பாவித சம்பவங்களுக்கு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூர் முதல் பொத்தூர்வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

17 / 56

ஆம்ஸ்ட்ராங் குறித்த தகவல்கள்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புத்த மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர்.

18 / 56

1956-ல் டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதத்தை தழுவிய இடத்தில், வழிபாட்டு தலம் எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், அதேநாளில் நாக்பூரில் உள்ள அந்த வழிபாட்டு தலத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். தமிழகத்தில் இருந்து நாக்பூர் புத்த வழிபாட்டு தலத்துக்கு செல்வோருக்கு, அவர்களுக்கான ரயில் கட்டண செலவு முழுவதையும் இவரே ஏற்று ஆண்டுதோறும் உதவி செய்து வந்தார்.

19 / 56

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட நாக்பூருக்கு செல்லும்ஒரு சிறப்பு ரயில் முழுவதையும் முன்பதிவு செய்து,தன்னுடன் அனைவரையும் நாக்பூர் புத்த வழிபாட்டுதலத்துக்கு ஆம்ஸ்ட்ராங் அழைத்து சென்றார்.

20 / 56

3 ஆண்டுகளுக்கு முன்பு புத்த மதத்தின் மீதான ஈர்ப்பால் பெரம்பூரில் அவர் வசிக்கும் பகுதி அருகே, புத்த கோயிலை ஆம்ஸ்ட்ராங் கட்டியுள்ளார். அங்கு தினமும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பலர், ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அந்த புத்த கோயிலில் சிறிது நேரம் மவுனமாக அமர்ந்துவிட்டு சென்றனர்.

21 / 56

ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான பிறகு பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

22 / 56

படிப்பதற்கு வசதி இல்லாத ஏராளமான மாணவர்களை ஆம்ஸ்ட்ராங் படிக்க வைத்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

23 / 56

ஆம்ஸ்ட்ராங்கால் அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவர்கள், வசதி இல்லாத மாணவர்கள் ஏராளமானோர் வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர்களாக உருவாகி உள்ளனர். பலருக்கு தொழில் தொடங்க உதவிகளை செய்திருக்கிறார்.

24 / 56

திரைத்துறையிலும் நடிகர்கள், இயக்குநர்களை உருவாக்கி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் மறைவால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

25 / 56

ஆம்ஸ்ட்ராங்கால் பயனடைந்த பெரம்பூர் லாந்தர் கார்டன் பகுதியை சேர்ந்த அமுதா கூறும்போது, “எனது தம்பியை ஆம்ஸ்ட்ராங் அண்ணன்தான் படிக்க வைத்தார். எங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், கடவுளிடம் கேட்பதற்கு முன்பு, அவரிடம்தான் கேட்போம். இப்போது அவர் எங்களை தனியாக விட்டு சென்றுவிட்டார்” என்றார்.

26 / 56

வழக்கறிஞர் முல்லை அன்பரசன் கூறும்போது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை ஆம்ஸ்ட்ராங் உருவாக்கி இருக்கிறார். அவர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஏழை மக்களின் வழக்கை வாதாடி கொடுப்பார். சட்டம் படிக்க ஆசைப்பட்டு இவரிடம் வந்தால் போதும். அவர்களை வழக்கறிஞர்களாக மாற்றி விடுவார்” என்றார்.

27 / 56

திருவூர் சங்கர் கூறும்போது, “மது அருந்துபவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டார். விளையாட்டிலும், கல்வியிலும் ஆர்வமிக்கவர்களுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டார். சட்டைப்பையில் எப்போதும் பேனா வைத்திருக்க வேண்டும். பேனாதான் நமக்கு ஆயுதம் என்று சிறுவர்கள், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருப்பார்” என்றார்.

28 / 56
29 / 56
30 / 56
31 / 56
32 / 56
33 / 56
34 / 56
35 / 56
36 / 56
37 / 56
38 / 56
39 / 56
40 / 56
41 / 56
42 / 56
43 / 56
44 / 56
45 / 56
46 / 56
47 / 56
48 / 56
49 / 56
50 / 56
51 / 56
52 / 56
53 / 56
54 / 56
55 / 56
56 / 56

Recently Added

More From This Category

x