1 / 10
தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு காலை 10 மணிக்கு வந்த விஜய் மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
2 / 10
நாங்குநேரியில் சாதிய வன்முறைக்கு ஆளாகி மீண்ட மாணவர் சின்னத்துரை உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், அவருடனேயே சிறி்து நேரம் அமர்ந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
3 / 10
தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது என்றும், தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை என்றும் தனது உரையில் குறிப்பிட்ட விஜய், சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
4 / 10
பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் வழங்கி கவுரவித்தார்.
5 / 10
10-ம் வகுப்பு பொதுத் தேர்தலில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல் காவியஶ்ரீ , ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவியா ஜனனி, திருநெல்வேலி சஞ்சனா ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன.
6 / 10
நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரைக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
7 / 10
விஜய்யை மேடையில் வைத்துக்கொண்டு ‘வாங்கண்ணா வணங்கங்கன்னா’ பாடலின் வரிகளை மாற்றி பாடி, விஜயை முதல்வராக்குவோம் என பெண் ஒருவர் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
8 / 10
கல்லூரியி்ல் மாணவர்களுக்கும் இதேபோல ஒரு விழா நடத்த வேண்டும் என மாணவியின் பெற்றோர் ஒருவர் மேடையில் கோரிக்கை வைத்தார்.
9 / 10
தன்னுடைய தாய், தந்தைக்கும் சால்வை அணிவிக்குமாறு விஜய்யிடம் மேடையில் மாணவி ஒருவர் கோரிக்கை வைக்க, உடனே விஜய் அவர்களுக்கும் சால்வை அணிவித்தார்.
10 / 10
மாணவிகளுடன் வந்த சிறுவர்கள் சிலர் விஜய்யின் கன்னத்தில் முத்தமிட்டனர். அத்துடன் சிறுவன் ஒருவரை விஜய் கையில் தூக்கிக் கொண்டது, கன்னத்தைக் கிள்ளியது, விஜய்யைக் கண்டதும் மாணவி கண்ணீர் விட்ட சம்பவங்களும் விழாவில் கவனம் ஈர்த்தன.