1 / 44
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் அதிகரிப்பு: கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 39 பேர் பலியாகினர். | படங்கள்: எம்.சாம்ராஜ், எஸ்.எஸ்.குமார்
2 / 44
உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் கோமுகி நதிக்கரையில் ஒரே இடத்தில் இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழையின் காரணமாக, ஒரேநேரத்தில் 21 பேரின் சடலங்களும் எரியூட்ட முடியவில்லை.
3 / 44
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு உடலாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
4 / 44
தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
5 / 44
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 / 44
“உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.
7 / 44
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.
8 / 44
இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 / 44
கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
10 / 44
அதுதான் பொருத்தமாக இருக்கும். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் தான் முக்கியம். வாக்களித்த மக்களோ, நாட்டு மக்கள் மீதோ அவருக்கு கவலை இல்லை” என்று கடுமையாக சாடினார்.
11 / 44
“கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்
12 / 44
“கள்ளச் சாராயத்தைத் தடுக்கத்தவறிய திமுக, அரசு வட மாவட்டங்களைச் சுடுகாடாக மாற்றியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச் சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டும். இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டும்,” என்று சீமான் சாடியுள்ளார்.
13 / 44
“கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்று பாமக வலிறுத்தியுள்ளது.
14 / 44
“கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து, தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மேலும், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
15 / 44
“தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 / 44
“கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
17 / 44
“தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச் சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
18 / 44
“தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது” என இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 / 44
“காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார். | படங்கள்: எம்.சாம்ராஜ், எஸ்.எஸ்.குமார்
20 / 44
21 / 44
22 / 44
23 / 44
24 / 44
25 / 44
26 / 44
27 / 44
28 / 44
29 / 44
30 / 44
31 / 44
32 / 44
33 / 44
34 / 44
35 / 44
36 / 44
37 / 44
38 / 44
39 / 44
40 / 44
41 / 44
42 / 44
43 / 44
44 / 44
படங்கள்: எம்.சாம்ராஜ், எஸ்.எஸ்.குமார்