1 / 53
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். திருநங்கைகள் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
2 / 53
பின்னர் கூத்தாண்டவர் தேரோட்டம் நடைபெறும். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள்.
3 / 53
அரசு சார்பில் அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்பு, தொண்டு நிறுவனங்கள் இணைந்து மிஸ் கூவாகம் போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்காக ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்தனர்.
4 / 53
அவர்களுக்கு சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் அழகி போட்டியும் நடத்தப்பட்டன. அதில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடத்தை பிடித்து மிஸ் கூவாகம் அழகி பட்டத்தை வென்றார்.
5 / 53
2-வது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த வர்ஷா ஷெட்டி, 3-வது இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுபப்பிரியா பிடித்தார்.
6 / 53
இதைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை இணைந்து ‘மிஸ் கூவாகம் - 2024’ அழகி போட்டி மற்றும் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் பலர் ஆடிப்பாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.
7 / 53
தொடர்ந்து ‘மிஸ் கூவாகம்-2024’ அழகி போட்டி நடைபெற்றது. மூன்று சுற்றுகள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்றில் 27 திருநங்கைகள் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
8 / 53
திருநங்கைகளின் நடை, உடை, பாவனை அடிப்படையில் 15 பேரை ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்தது. இரண்டாம் சுற்றில் தேர்வு பெற்ற 15 பேரில் 7 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
9 / 53
இதைத் தொடர்ந்து நேற்றிரவு நகராட்சி திடலில் ‘மிஸ் கூவாகம்-2024’ அழகி போட்டிக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.
10 / 53
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், ஆட்சியர் பழனி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், மணிக் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச் சந்திரன், திமுக மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகரமன்ற தலைவர் தமிழ் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
11 / 53
இறுதிச் சுற்றில் மேடையில் வலம் வந்த ஒவ்வொரு திருநங்கைகளிடமும் பொது அறிவு, பாலினம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.
12 / 53
ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் ‘மிஸ் கூவாகம்-2024’ பட்டம் வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். முதலிடத்தை ஈரோட்டைச் சேர்ந்த ரியா தட்டிச் சென்றார்.
13 / 53
2-வது இடத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த மேகா, 3-வது இடத்தை சென்னையைச் சேர்ந்த யுவந்திலின் ஜான் பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கிரீடம் சூட்டி வாழ்த்தினர்.
14 / 53
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், “திருநங்கைகளுக்கு ‘திருநங்கை’ என பெயர் வைத்தவர் கருணாநிதி. தற்போது வேலூரில் மாநகராட்சி கவுன்சிலராகவும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலராகவும் திருநங்கைகள் பதவியில் உள்ளனர்.
15 / 53
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திருநங்கைகள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் கடனுதவியை தமிழக அரசு வழங்குகிறது” என்றார்.
16 / 53
முதலிடம் பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம். இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் இடம் பெற்றவருக்கு ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
17 / 53
18 / 53
19 / 53
20 / 53
21 / 53
22 / 53
23 / 53
24 / 53
25 / 53
26 / 53
27 / 53
28 / 53
29 / 53
30 / 53
31 / 53
32 / 53
33 / 53
34 / 53
35 / 53
36 / 53
37 / 53
38 / 53
39 / 53
40 / 53
41 / 53
42 / 53
43 / 53
44 / 53
45 / 53
46 / 53
47 / 53
48 / 53
49 / 53
50 / 53
51 / 53
52 / 53
53 / 53