Published on : 20 Dec 2023 10:21 am

மழை ஓய்ந்தும் தொடரும் துயர் @ தென்மாவட்டங்கள் | புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

Published on : 20 Dec 2023 10:21 am

1 / 22
திருநெல்வேலி சந்திப்பில் நேற்று தேங்கியிருந்த வெள்ளம்.
2 / 22
தூத்துக்குடி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை சாலையில் மழை நீர் 2 அடி உயரத்துக்கு தேங்கியிருந்ததால், நேற்று 3-வது நாளாக திருநெல்வேலி, திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
3 / 22
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சாலையில் நேற்று மூன்றாவது நாளாக தேங்கியிருந்த வெள்ளம்.
4 / 22
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் மூன்று நாட்களாக சூழப்பட்ட அகரம் கிராமத்தில் இருந்து ராணுவத்தினரால் படகில் மீட்கப்பட்ட கிராம மக்கள்.
5 / 22
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் கரையோர மரங்களின் முக்கால்வாசி அளவுக்கு தாமிரபரணியில் வெள்ளம் நேற்று பாய்ந்தோடியது.
6 / 22
ஸ்ரீவைகுண்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் நேற்று 2-வது நாளாக குறையவில்லை. அங்குள்ள நீதிமன்ற வளாகத்தை சுற்றி தேங்கி நிற்கும் வெள்ளம்.
7 / 22
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரிய பள்ளம் உருவாகி உள்ளது.
8 / 22
திருநெல்வேலி டவுன் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவில் நேற்று தேங்கியிருந்த நீரில் மூழ்கியுள்ள கார். | படம்: மு.லெட்சுமி அருண் |
9 / 22
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி வெள்ளத்தால் மூன்று நாட்களாக சூழப்பட்ட அகரம் கிராமத்துக்கு படகில் செல்ல தயாரான ராணுவத்தினர்.
10 / 22
குமரியில் பெய்த கனமழையால் மாம்பழத்துறையாறு அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவான 54 அடியை எட்டியது.
11 / 22
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரளும் தண்ணீர்.
12 / 22
கயத்தாறு தெற்கு கோனார் கோட்டை அருகே உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
13 / 22
மேலக்கரந்தையில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையை மூழ்கடித்துச் செல்லும் காட்டாற்று வெள்ளம்.
14 / 22
கருப்பூர் அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததில் பொருட்கள் மிதக்கின்றன.
15 / 22
திருநெல்வேலி டவுனில் சேரன் மகாதேவி சாலையில் நேற்றும் பெருகி ஓடிய வெள்ள நீர்.
16 / 22
கரூர் வைஸ்யா வங்கியின் திருநெல்வேலி கோட்ட அலுவலகம் சார்பில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்ப ட்ட மக்களுக்கு பெல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நிவாரண உதவிகளை வங்கியின் உதவிப்பொது மேலாளர் செந்தில் குமரன், கிளை மேலாளர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர்.
17 / 22
ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை வீரர்களால் மீட்கப்ப ட்டார்.
18 / 22
திருநெல்வேலி அருகே வசவப்ப புரத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட வாழைத்தோட்டம்.
19 / 22
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்த அகரம் கிராமத்தில் இருந்து ராணுவத்தினரால் படகில் மீட்கப்பட்ட பொதுமக்கள்.
20 / 22
திருநெல்வேலிடவுன் சேரன்மகாதேவி சாலையில் வீடுகளில் சிக்கியுள்ள முதியவர்களை மீட்க படகுடன் செல்லும் மீட்புப் படையினர்.
21 / 22
தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
22 / 22
தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள மூன்றாவது மைல் மேம்பாலத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

Recently Added

More From This Category

x