Published on : 19 Dec 2023 10:06 am

தலைநகரை மிஞ்சிய மழை தாண்டவம் @ தென் மாவட்டங்கள் | புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

Published on : 19 Dec 2023 10:06 am

1 / 22
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலிருந்து படகு மூலம் மீட்டு வரப்பட்ட பொதுமக்கள்.
2 / 22
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச் சாலை பகுதியை வெள்ளம் சூழ்ந்ததால் படகில் மீட்டுவரப்பட்ட பொதுமக்கள்.
3 / 22
திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் பொதுமக்களை மீட்ட பேரிடர் குழுவினர்.
4 / 22
5 / 22
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்.
6 / 22
7 / 22
தூத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
8 / 22
தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம் கொக்கிரகுளம் பாலத்தை தொட்டபடி செல்கிறது.
9 / 22
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் சாலையில் தேங்கிய தண்ணீரில் மிதந்தபடி செல்லும் வாகனம்.
10 / 22
திருநெல்வேலி அருகேயுள்ள மணிமூர்த் தீஸ்வரம் பகுதியில் நீரில் மூழ்கிய வாகனம்.
11 / 22
தூத்துக்குடி பி அண்டு டி காலனி பகுதியிலிருந்து குடை பிடித்தபடி வெளியேறிய பொதுமக்கள்.
12 / 22
குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் திருப்பதிசாரத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
13 / 22
திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடல்போல் காட்சியளிக்கிறது.
14 / 22
கயத்தாறில் உள்ள கசத்தாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோதண்டராமேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்தது.
15 / 22
தூத்துக்குடி, திருநெல்வேலி செல்ல முடியாததால் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் பரிதவித்தனர்.
16 / 22
எட்டயபுரத்தில் இருந்து நாவலக்கம் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 / 22
வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள செந்தூர் விரைவு ரயில். இந்த ரயிலில் உள்ள பயணிகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
18 / 22
தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் மக்கள். | படம்: என்.ராஜேஷ் |
19 / 22
திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் தாதன் குளம் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தண்டவாளம் அந்தரத்தில் நிற்கிறது.
20 / 22
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து இருந்தது.
21 / 22
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தங்கள் வீடுகளை மூழ்கடித்து தாமிரபரணி வெள்ளம் ஓடுவதை சோகமாகப் பார்க்கும் பொதுமக்கள்.
22 / 22
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய வளாகத்தினை சூழ்ந்த ஆற்று வெள்ள நீர்.

Recently Added

More From This Category

x