Published on : 18 Dec 2023 09:04 am

மழையோ மழை... மிதக்கும் தென்மாவட்டங்கள் | புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

Published on : 18 Dec 2023 09:04 am

1 / 17
கனமழையால் திருநெல்வேலியில் தாமிரபரணியில் இருகரை தொட்டு பாய்ந்த வெள்ளம்.
2 / 17
குற்றாலம் பிரதான அருவியில் தடாகத்தை மூழ்கடித்தவாறு ஆர்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம்.
3 / 17
பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் வேரோடு சாய்ந்த மரம்.
4 / 17
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மணிமுத்தாறு அருவியை மூழ்கடித்தவாறு பாய்கிறது.
5 / 17
பாளையங்கோட்டை காமராஜர் காலனியை சூழ்ந்த வெள்ளம்.
6 / 17
குமரி மாவட்டம் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலில் வெள்ளம் புகுந்ததால் மார்கழி மாத பிறப்பான நேற்று பக்தர்கள் வருகை இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.
7 / 17
பாளையங்கோட்டை சேவியர் காலனியில் தேங்கிய தண்ணீர்.
8 / 17
நெல்லை மனக்காவலம்பிள்ளை நகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
9 / 17
சாத்தான்குளத்தில் சாலையில் ஆறுபோல ஓடிய மழை வெள்ளம்.
10 / 17
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் அதிசய விநாயகர் கோயில் மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி வெள்ளத்தால் மூழ்கி உள்ளது.
11 / 17
ஆச்சிமடம் சிலோன் காலனியை வெள்ளம் சூழ்ந்த நிலையில், மக்களை தன்னார்வலர்கள் மீட்டனர்.
12 / 17
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
13 / 17
திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு செல்லும் த.மு. சாலையில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் தத்தளித்தவாறு செல்லும் வாகனம்.
14 / 17
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் வெள்ளத்தில் மூழ்கிய கடைவீதி.
15 / 17
திருநெல்வேலியில் இடை விடாது கொட்டிய மழையால் சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு சாலையை மூழ்கடித்தவாறு பாய்ந்த தண்ணீர் கடைகளுக்குள் புகுந்தது.
16 / 17
பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையை மூழ்கடித்து சென்ற வெள்ளம்.
17 / 17
கனமழை காரணமாக தூத்துக்குடி ஜி.சி.சாலையில் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.

Recently Added

More From This Category

x