1 / 15
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப் போட்டிருக்கிறது மிக்ஜாம் புயல். மெதுவாக இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடிந்தபாடில்லை. கார், பைக் என லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூழ்கியுள்ளன. வெள்ள நீரை அகற்ற முடியாமல் தொடர்ந்து போராடி வருகிறது அரசு இயந்திரம். மின் விநியோகம் இல்லாததாலும், குடிநீர், பால், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும், செல்போன் தொடர்பு அரைகுறையாக இருப்பதாலும் மக்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மக்கள் முழுவதுமாக மீண்டால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்!
தாம்பரம் சிடிஓ காலனி ராகவேந்திரா நகர் பகுதியில் நடக்க இயலாத மூதாட்டி உள்ளிட்டோரை படகில் மீட்ட தன்னார்வலர்கள்.
2 / 15
பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் 2 நாட்களாக வெள்ளம் வடியாததால் குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள்.
| படங்கள்: எம்.முத்துகணேஷ் |
3 / 15
வேளச்சேரியில் காவலர் உதவியுடன் மூதாட்டியை படகுக்கு தூக்கிச் செல்லும் தன்னார்வலர்கள்.
4 / 15
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
5 / 15
போரூர் - குன்றத்தூர் நெடுஞ்சாலை நீரில் மூழ்கியுள்ளதால் நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் வாகனங்கள்.
6 / 15
சென்னை சூளை அங்காளம்மன் கோயில் தெருவில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்துள்ளது. இடுப்பளவு தேங்கியுள்ள நீரில் சிரமப்பட்டு நடந்து வரும் மூதாட்டி.
| படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
7 / 15
தாம்பரம் சிடிஓ காலனி
8 / 15
தாம்பரம் சிடிஓ காலனி குட்வில் நகர் பகுதி.
9 / 15
சூளை அங்காளம்மன் கோயில் தெரு.
10 / 15
சென்னை புழுதிவாக்கத்தில் பால் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
11 / 15
பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதி.
12 / 15
சென்னை வண்ணாரப் பேட்டை கல்லறை சாலை பகுதியில் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்.
13 / 15
சென்னை கே.பி.பூங்கா நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
| படம்: ச.கார்த்திகேயன் |
14 / 15
வேளச்சேரி ராம் நகர், குபேந்திரன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டைவிட்டு படகுகள் மூலம் வெளியேறும் பொதுமக்கள்.
| படங்கள்: ம.பிரபு |
15 / 15
மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே மழைநீர் அகற்றப்படாதது மற்றும் மின்சாரம் வழங்காததை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.