Published on : 18 Nov 2023 19:05 pm
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் அமைப்பின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரத்தில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நூலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பல்லாவரம் தொகுதியில், தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தொடங்கப்பட்டது.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம்11 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்கள், கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 21 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.