Published on : 06 Nov 2023 16:15 pm

டெல்லியை கலங்கடிக்கும் காற்று மாசு - புகைப்படத் தொகுப்பு

Published on : 06 Nov 2023 16:15 pm

1 / 28
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லிக்குள் வாகனங்கள் நுழையவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படங்கள்: சுஷில் குமார் வர்மா
2 / 28
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே காற்று மாசு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பலருக்கும் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
3 / 28
காற்றின் தரக் குறியீடு (Air Quality Index – AQI) கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆக மோசமடைந்தது.
4 / 28
டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காற்றில் தூசு, துகள்செறிவு பிஎம்2.5 என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவுக்குமாசடைந்த காற்றை தொடர்ச்சியாக சுவாசித்தால், அது சுவாசமண்டலத்தில் ஆழமாக ஊடுருவி பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும்.
5 / 28
உலக சுகாதார அமைப்பு மற்றும் அரசு பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான வரம்பைவிட, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பலமடங்கு மோசமான நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
6 / 28
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை பணிகள் முடிந்து அதன் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருகிறது. இந்தசூழலில், காற்று வீசுவதில் ஏற்பட்டுள்ள மாறுபாடு, வெப்பநிலை ஆகியவையும் டெல்லியில் காற்றின் தரத்தை கடுமையாக பாதித்து வருகின்றன.
7 / 28
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, கடந்த அக்.27 முதல் நவ.3-ம் தேதி வரை டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. அதன்படி, கடந்த 3-ம் தேதி காற்றின் தரக் குறியீட்டு அளவு 450-க்கு மேல் அதிகரித்து, மிக மோசமான அளவாக ‘சிவியர் பிளஸ்’ என்ற நிலையை எட்டியது.
8 / 28
கடந்த 2021 நவ.12-ம் தேதி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஆக அதிகரித்ததுதான் இதுவரை மிகவும் மோசமான அளவாக கருதப்படுகிறது. அதன்பிறகு, கடந்த 3-ம் தேதிதான் இந்த குறியீடு 24 மணிநேர சராசரி அளவாக 468-ஐ தொட்டது.
9 / 28
டெல்லியின் அண்டை நகரங்களான காசியாபாத் (410), குருகிராம் (441), நொய்டா (436), கிரேட்டர் நொய்டா (467), பரீதாபாத் (461), டெல்லி பல்கலைக்கழகம் (456), லோதி சாலை (385) ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் அபாயகரமான நிலையில் உள்ளது.
10 / 28
மருத்துவர்கள் கூற்றுப்படி, ஆரோக்கியமான உடல்நலனுக்கு காற்றின் தரக் குறியீடு என்பது 50-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், தற்போது டெல்லியில் கடந்த சில நாட்களில் காற்றின் தரக் குறியீடு அளவு அதைவிட பல மடங்கு அதிகரித்து, 400-ஐ தாண்டியுள்ளதால் டெல்லி மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
11 / 28
காற்றின் தரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் லாரிகள், இலகுரக வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 / 28
நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பகிர்மானம், குழாய் பதித்தல் போன்ற பொது திட்டங்கள், கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
13 / 28
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐக்யூ அமைப்பு, காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து மிக மோசமான அளவில் காற்று மாசு நிலவும் நகரங்களை பட்டியலிட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, டெல்லி இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் கொல்கத்தா, மும்பை மட்டுமின்றி, லாகூர், கராச்சி (பாகிஸ்தான்), தாகா (வங்கதேசம்) ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.
14 / 28
இன்று (நவம்பர் 6) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு (Air Quality Index – AQI) 488 ஆக உள்ளது. சஃபார் (SAFAR - System of Air Quality and Weather Forecasting And Research) கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆக மோசமடைந்தது.
15 / 28
காற்று மாசை எதிர்கொள்ள டெல்லியில் கிராப்-4 (GRAP-4) கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் ப்ளான் (Graded Response Action Plan) அமலுக்கு வந்துள்ளது. கிராப்-4 அமலாகியுள்ளதால் டெல்லிக்குள் நுழைய சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட மிக மிக அத்தியாவசியமான பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 / 28
தற்போதைய மோசமான காற்று மாசுபாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண உதவத் தயாராக இருக்கிறது கான்பூர் ஐஐடி. கிளவுட் சீடிங் ( cloud seeding) முறையில் செயற்க மழையை உருவாக்கி அதன் மூலம் காற்றில் உள்ள நச்சுத் துகள்களை கரையச் செய்யலாம் என ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.
17 / 28
பஞ்சாப்பில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது தேசியத் தலைநகரில் இருந்து 500 கி.மீ., நடக்கிறது. ஆனால் ஹரியாணா மாநிலம் டெல்லியில் இருந்து 100 கி.மீ.,ட்டுமே தள்ளியிருக்கிறது. ஹரியாணாவே டெல்லி காற்று மாசு அதிகரிக்கக் காரணம். இதனால், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து ஹரியாணாவின் மனோகர் லால் கட்டார் அரசு எடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
18 / 28
இதனிடையே, நாடு முழுவதும் காற்று மாசுபாட்டை கண்காணிக்க மாநில அளவில் நிரந்தர நிபுணர் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜய் நாராயண்ராவ் கஜ்பஹார் என்பவர் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது
19 / 28
"காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அப்படியிருக்க உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழு அமைத்து உத்தரவிட்டால் மட்டும் காற்று மாசுபாடு கட்டுப்பட்டுவிடுமா?" என்று கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. | படங்கள்: சுஷில் குமார் வர்மா
20 / 28
21 / 28
22 / 28
23 / 28
24 / 28
25 / 28
26 / 28
27 / 28
28 / 28

Recently Added

More From This Category

x