காவிரி பிரச்சினையில் கன்னட திரையுலகினர் போராட்டம் - போட்டோ ஸ்டோரி
Published on : 29 Sep 2023 18:27 pm
1 / 12
காவிரி பிரச்சினையையொட்டி, நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். | படங்கள்: முரளிகுமார்
2 / 12
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
3 / 12
இந்தப் போராட்டத்துக்கு கன்னட திரையுலகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
4 / 12
நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் திரண்டனர்.
5 / 12
கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு அலுவலகம் அருகே கன்னட திரைப் பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 12
இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ் குமார் பேசும்போது, நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
7 / 12
“மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நேற்றைய சம்பவத்துக்கு நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது” என்றார் சிவராஜ் குமார்.
8 / 12
மேலும், “கன்னட மக்கள் உலகம் முழுவதும் நல்ல மதிப்பும், மரியாதையையும் பெற்று விளங்குகின்றனர். பரஸ்பர மரியாதையுடன் பல்வேறு மொழி, கலாசாரத்தை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களும் வாழும் மாநிலம் கர்நாடகாவைப் போல எங்குமில்லை. உலகம் முழுவதும் நாம் சம்பாதித்த மரியாதையை பாதுகாக்க வேண்டும்” என்று சிவராஜ் குமார் கூறினார்.
9 / 12
10 / 12
11 / 12
12 / 12