Published on : 09 Jun 2023 17:07 pm

தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின் - போட்டோ ஸ்டோரி

Published on : 09 Jun 2023 17:07 pm

1 / 15

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொடங்க ஏதுவாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். | தகவல்: வி.சுந்தர்ராஜ் | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

2 / 15

நடப்பாண்டு 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காகத் தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

3 / 15

இம்முறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்தது. தொடர்ந்து பல இடங்களில் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 / 15

பாசனத்திற்காக மேட்டூர் அணையில் வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் ஒரு சில பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

5 / 15

இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார். சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

6 / 15

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தஞ்சை அருகே ஆலக்குடியில் முதலைமுத்து வாரியில் ரூ.20 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது. இப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

7 / 15

பின்னர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பான பணி முன்னேற்றங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், முதல்வரிடம் அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை சுட்டிக்காட்டி எடுத்துக் கூறினார்.

8 / 15

தொடர்ந்து பூதலூர் அருகே உள்ள விண்ணமங்கலத்தில் ரூ.34 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இப்பணிகளையும் முதன் முதல்வர் மு. க .ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

9 / 15

முதல்வர் வருகையின் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வழிநடக பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடம் முதல்வர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பூதலூர் அருகே சிறுமிகள் முதல்வரை வரவேற்றபோது அவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்தினார்.

10 / 15

முதல்வர் தஞ்சாவூர் வருகையை ஒட்டி மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

11 / 15
12 / 15
13 / 15
14 / 15
15 / 15

Recently Added

More From This Category

x