Published on : 17 Mar 2023 16:35 pm
சென்னையின் பல இடங்களில் இன்று (மார்ச் 17) காலை பரவலாக மழை பெய்தது. | படங்கள்: வேளாங்கன்னி ராஜா
கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, புரசைவாக்கம், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெயதது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.