Published on : 13 Mar 2023 15:55 pm
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி, வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்து தங்களை தயார் படுத்திக்கொண்டனர். | படங்கள்: வி.எம்.மணிநாதன், எஸ். கிருஷ்ணமூர்த்தி.
ஈ.வெ.ரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏழுதியதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி.
மதுரை ஈவேரா பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி