Published on : 17 Jan 2023 19:12 pm
ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.17) நடைபெற்றது. | படங்கள்: ஜி.மூர்த்தி.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 10 சுற்றுகளாக நடந்து முடிந்தது. 820 மாடுகள் களமிறக்கப்பட்ட நிலையில், 304 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்தார்.
20 காளைகளை அடக்கிய அஜய் இரண்டாது இடம் பிடித்தார்.
12 காளைகளை அடக்கிய ரஞ்சித் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர் மற்றும் முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளர் புதுக்கோட்டை தமிழ்செல்வன் ஆகியோருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான கரும் பசுமாடு ஒன்றும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு ஹோன்டா ஷைன் பைக்கும், மூன்றாம் இடம்பிடித்த காளையின் உரிமையாளருக்கு ஸ்கூட்டியும் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 53 பேர் காயமடைந்த நிலையில், 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்படாத காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர் போட்டியில் அவிழ்க்கப்பட்ட காளைகளில் பெரும்பாலும் காளைகளே அதிகமான பரிசுகளைத் தட்டிச் சென்றன.