Published on : 12 Jan 2022 15:49 pm
மாக் பிஹூ ஜனவரியில் அசாமில் கொண்டாடப்பாடும் அறுவடை திருவிழா. தென்னிந்தியாவில் பொங்கல் எவ்வாறு அறுவடை பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறதோ அவ்வாறு அசாமில் மாக் பிக் ஹூ கொண்டாடப்படுகிறது. மாக் பிஹு தினமான ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இரவில் விருந்து, பாடல், நடனம் என தங்களது நேரத்தை அசாம் மக்கள் செலவிடுவார்கள். இந்த நிலையில் மோரிகான் மாவட்டத்தில் தடுப்பூசி விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில், வைக்கோலால் செய்யப்பட்ட கரோனா தடுப்பூசியை வைத்துள்ளனர். இது அசாம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம்: ரித்து ராஜ் கொன்வார்