தென் திருப்பதி என அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ராஜகோபுரம் 120 அடி உயரம், 7 நிலைகளையுடையது. ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பில் 13.3.2022-ல் பாலாலய பூஜையுடன் தொடங்கியது.