Published on : 24 Dec 2022 14:54 pm

டெல்லியில் கவனம் ஈர்த்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை - போட்டோ ஸ்டோரி

Published on : 24 Dec 2022 14:54 pm

1 / 22

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை சனிக்கிழமை காலை டெல்லியை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டனர். டெல்லியே அதிரும் அளவுக்கு கூட்டம் குவிந்தது. | படங்கள்: கமல் சிங்

2 / 22

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை சனிக்கிழமை காலை டெல்லியை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டனர். டெல்லியே அதிரும் அளவுக்கு கூட்டம் குவிந்தது.

3 / 22

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது.

4 / 22

சோனியா காந்தி இரண்டாவது முறையாக இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்கிறார். முன்னதாக, அக்டோபர் மாதம் கர்நாடகாவில் நடந்த யாத்திரையில் அவர் கலந்து கொண்டார்.

5 / 22

ஃபரிதாபாதிலிருந்து டெல்லிக்குள் யாத்திரை நுழைந்த போது, டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்திரி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை வரவேற்றனர். அப்போது தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, "நாட்டின் சாமானிய மக்கள் தற்போது அன்பை பற்றி பேசத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர். நான் ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்... நாங்கள் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறந்துள்ளோம்” என்றார்.

6 / 22

மேலும், “இந்த யாத்திரையின் நோக்கமே, மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் உண்மையான இந்தியாவை எடுத்துக்காட்டுவதுதான். அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாம் அன்பை பறப்புகிறோம்" என்றார் ராகுல் காந்தி.

7 / 22

சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காலை 8.30 மணியளவில் டெல்லி அப்பலோ மருத்துவமனை அருகே வந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து செல்வதற்காக அவர் தனது யாத்திரையை சிறிது நேரம் நிறுத்தினார்.

8 / 22

அதேபோல பின்தொடர்ந்து வரும் தொண்டர்களையும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு நிற்குமாறு கேட்டுக்கொண்டார் ராகுல்.

9 / 22

பரத்பூரில் இருந்து சனிக்கிழமை தொடங்கிய யாத்திரை, 23 கிமீ பயணித்து மாலை செங்கோட்டையை அடைந்ததும் நிறைவடையும். பின்னர் 9 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து யாத்திரை தொடங்கும்.

10 / 22

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற யாத்திரை: டெல்லியில் நடந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கரோனா விதிகளைப் பின்பற்றி யாத்திரையை மேற்கொள்ளுமாறும், இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி இருந்தார். எனினும், இன்றைய யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

11 / 22

அனுராக் தாக்கூர் கண்டனம்: கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படுவதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீனா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

12 / 22

மேலும், “கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய காலம் இது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை சந்தித்த ராகுல் காந்தியோ மற்ற காங்கிரஸ் தலைவர்களோ கரோனா பரிசோதனை மேற்கொண்டார்களா அல்லது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்களா?” என்று அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியிருந்தார்.

13 / 22

“ஊழல்வாதிகளை ஒன்று சேர்ப்பதற்கான யாத்திரை இது. அவர்கள்(காங்கிரஸ் கட்சியினர்) ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்திப்பதற்குப் பதில், நாட்டின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், “இவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்” என்றும் அனுராக் தாக்கூர் காட்டமாக கூறியிருந்தார்.

14 / 22

ப.சிதம்பரம் பதில்: அனுராக் தாக்கூரின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "அனுராக் தாக்கூர் அவ்வாறு விமர்சித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் இதில் இணைந்திருக்கிறார்கள். அதனால், அனுராக் தாக்கூர் அவ்வாறு கூறி இருக்கிறார். அவர் பெரிய அமைச்சர். நாங்கள் சிறிய மனிதர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

15 / 22
16 / 22
17 / 22
18 / 22
19 / 22
20 / 22
21 / 22
22 / 22

Recently Added

More From This Category

x